அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
படைகளின் ஆண்டவரே! வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவரே! உம் சிறகுகளால் என்னை அரவணைத்துக் காப்பாற்றும். உமது உண்மையே என் கவசமும் கேடயமுமாய் அமையச் செய்யும். இரவின் திகிலும், இருளின் கொள்ளை நோயும், பகலின் வாதையும், என்னை அணுகாமல் எல்லாம் வல்லவரே என்னைக் காப்பாற்றும். தீங்கு எனக்கு நேரிடாமலும், வாதை என் வீட்டை நெருங்காமலும் உம் தூதர்களை அனுப்பி என்னைப் பலப்படுத்தும். உமது மாட்சியும், உமது மகத்துவமும் எனக்கு அரணாக அமையச் செய்யும் என்று உம்மைப் பணிந்து வேண்டுகிறேன். நான் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் எனக்கு பதில் அளிக்க காலந்தாழ்த்தாதேயும். எம் பங்கு மக்கள் எல்லோரையும் ஆசீர்வதியும். அமைதியும் மனமகிழ்வும் நிறைந்த நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளித்தருள மன்றாடுகிறேன்.
-ஆமென்.
Padaigalin Aandavare! Valimaiyum Aatralum Konda Aandavare! Um Siragugalal Ennai Aravanaithu Kaappaatrum. Umathu Unmaiye En Kavasamum Kedayamumaai Amaiya Seiyum. Iravin Thigilum, Irulin Kollai Noyum, Pagalin Vaathaiyum, Ennai Anugaamal Ellaam Vallavare Ennaik Kaappaatrum. Theengu Enakku Neridaamalum, Vaathai En Veettai Nerungaamalum Um Thoothargalai Anuppi Ennaip Palapaduthum. Umathu Maatchiyum, Umathu Magathuvamum Enakku Aranaaga Amaiya Seiya Ummaip Paninthu Vendugiren. Naan Ummai Nokki Manraadum Pothellaam Enakku Pathil Alikka Kaalam Thaazhthaadheyum. Em Pangu Makkal Elloraiyum Aaseervathiyum. Amaithiyum Manamagilvum Niraintha Neediya Aayulaal Avargalukku Niraivalitharul Manraadugiren.
-Amen.

Comments
Post a Comment